மிகக் குறைந்த வயதில் நொபெல் பரிசு வென்றிருப்பவர் மலாலா

Oct 10, 2014, 02:32 PM

சமாதானத்துக்கான நோபெல் பரிசை வென்றுள்ள வெறும் 17 வயதே ஆகும் மலாலா யூசுஃப் ஸயீ, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்.

அப்பிராந்தியத்தில் தாலிபான்களின் கரம் வலுப்பெற்று, பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவது தடைபட்டபோது, சிறுமிகளின் கல்வி உரிமைக்காக மலாலா குரல்கொடுத்துவந்தார்.

2012 ஒக்டோபரில் தனது பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இவர் தலையில் சுடப்பட்டிருந்தார்.

பாகிஸ்தானிய மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிய அவருக்கு மேல் சிகிச்சை வழங்க பிரிட்டன் உதவியது.

பர்மிங்ஹாம் நகரில் மிகப் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிய மலாலா, இளம்பிராயத்தினரின் கல்வி உரிமைக்கான ஒரு சர்வதேச சின்னமாக உருவெடுத்துள்ளார்.

அவரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றிய ஒலிக் குறிப்பு ஒன்றை நேயர்கள் இங்கு கேட்கலாம்.