Tan Sri உள்ளிட்ட அறுவர் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பு!

Apr 06, 2017, 04:05 AM

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட Tan Sri பட்டம் கொண்ட தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட அறுவரை, 6 நாட்களுக்கு தடுத்து வைக்க, Putrajaya Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான அதிகாரிகளில் நால்வர் வடிகால் நீர் பாசனத் துறையைச் சேர்ந்தவர்கள், அவர்கள், அந்த Tan Sri யை உட்படுத்திய ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படுகிறது. குத்தகை ஒன்று தொடர்பில், போலி விலைப் பட்டியலை காட்டி, அக்கும்பல் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரிங்கிட் நட்டத்தை ஏற்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது. #TML