Juventus - Real Madrid மோதும் Champions லீக் இறுதியாட்டம்!

Jun 03, 2017, 05:02 AM

உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் தற்போது, இத்தாலி மற்றும் Spain ஜாம்பவான்கள் Juventus - Real Madridடும் மோதும் Champions லீக் இறுதியாட்டத்திற்கு திரும்பியிருக்கின்றது! கிண்ணத்தை Real தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது Juventus தட்டிப் பறிக்குமா என்பது நாளை அதிகாலை தெரிந்து விடும். Spain La Liga கிண்ணத்தை கைப்பற்றிய உற்சாகத்தோடு Zinedine Zidaneனின் அணி களமிறங்குகிறது; Juventusசோ Seri அ மற்றும் இத்தாலி ஆகிய இரு கிண்ணங்களை வென்ற அணி என்ற பெருமிதத்துடன் களத்தில் கால் வைக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளில், இரு முறை Champions லீக் கிண்ணத்தை வென்ற அணியான Real லுக்கு எதிரான அவ்வாட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என Juve பயிற்றுநர் Max Allegri கூறுகின்றார். #TML