Man United -Zlatan பந்தம் முடிவுக்கு வந்தது!

Manchester United - Zlatan Ibrahimovich இடையிலான உறவு முடிவுக்கு வந்திருக்கிறது!. காயத்தால் வருடக் கடைசி வரை ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால் ,ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடையும் அவரின் ஒப்பந்ததை நீட்டிக்கவில்லை என, United அறிவித்துள்ளது. ஓராண்டு ஒப்பந்தத்தின் பேரில் கடந்த பருவத்தில் Old Trafford வந்த Ibrahimovich, வந்த வேகத்திலேயே United ரசிகர்களைக் கவர்ந்தார். 46 ஆட்டங்களில் 28 கோல்களைப் போட்ட 35 வயது Ibra, English Leage கிண்ணம், Europa லீக் கிண்ணம் ஆகியவற்றுடன் United-டில் இருந்து விடைபெறுகிறார்.
#TAMIL #TML