Messiயின் நிழலில் இருந்து வெளியேறுகிறார் Neymar!

Aug 03, 2017, 03:18 AM

Barcelonaவில், Lionel Messiயின் நிழலில் இருந்து வெளியேறுகிறார் Neymar! PSGயில் இணையப் போகும் Neymar, அந்த France கிளப்பில் இனி முக்கிய ஆட்டக்காரராக மிளிரவிருக்கின்றார். உலக கால்பந்து வரலாற்றிலேயே விலை மதிப்புடைய ஆட்டக்காரர் என்றால் அது இனி Neymarதான். அந்த Brazilலிய நட்சத்திரத்திற்கு 198 மில்லியன் பவுன் வரை செலவிட PSG தயாராகியிருக்கின்றது. ஏற்கனவே, Juventus சில் இருந்து Paul pogbaவை வாங்க Man United செலவிட்ட தொகையை காட்டிலும் அது இரு மடங்குக்கும் மேலாகும். எனினும், அத்தொகையை அப்படியே கொடுப்பதா அல்லது தவணைகளில் கொடுப்பதா என்பதில் மட்டுமே தற்போது குழப்பம்; மற்றப்படி, PSG க்கு மாறிச் செல்வதில் Neymar ருக்கு எந்த தடைகளும் இல்லையாம். Neymar, PSG யில், 5 ஆண்டுகளுக்கு 450 மில்லியன் பவுன் சம்பளத்தை உள்ளடக்கிய ஒப்பந்த்திற்கு இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது. #TML