Arsenal, 4-1 என்ற பெனால்டியில் Chelseaயை வீழ்த்தியது!

Aug 07, 2017, 12:50 AM

2017 Community Shield கிண்ண ஆட்டத்தில், Arsenal, 4-1 என்ற பெனால்டியில் Chelseaயை வீழ்த்தியது. முழு நேர ஆட்டம் 1-1 என சமநிலை கண்டதை அடுத்து பெனால்டி வழங்கப்பட்டது. Arsenalலுக்கு Theo Walcott, Nacho Monreal, Alex Oxlade-Chamberlain, Olivier Giroud ஆகியோர் கோலடித்தனர். இவ்வெற்றியினால், புதிய EPL பருவத்தை Arsenal உற்சாகத்துடன் தொடங்குமென நிர்வாகி Arsene Wenger நம்புகின்றார். Arsenal, இதே வேகத்துடன் EPL லில் களமிறங்க வேண்டும் என்றும் Wenger கூறினார். #TML