Liverpool, Evertonனைச் சந்திக்கிறது!

Dec 05, 2017, 12:43 AM

இங்கிலிஷ் FA கிண்ண 3 ஆம் சுற்று ஆட்டத்திற்கான குலுக்கலில் Liverpool, Evertonனைச் சந்திக்கிறது. அந்த Merseyside derby ஆட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அவ்விரு அணிகளும் இவ்வார இறுதியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்திலும் மோதுகின்றன. இவ்வேளையில், நடப்பு வெற்றியாளரான Arsenal, Nottingham Forestட்டை எதிர்கொள்கிறது. Manchester City, Burnleyயுடன் களம் காண்கிறது. Manchester United, Derbyயுடன் மோதுகிறது. Chelsea, Norwichச்சை எதிர்கொள்கிறது. #TML