Trainer of Trainers திட்டம்!

Feb 24, 2018, 04:23 AM

மலேசியப் போதைப் பொருள் தடுப்புச் சங்கம் PEMADAM, பல்கலைழக மாணவர்களுக்காக, TOT எனும் Trainer of Trainers திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

முதல் கட்டமாக நாட்டிலுள்ள 500 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என PEMADAM கூறியது.

போதைப் பொருள் வகைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பித்தர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் ஆகியவை பற்றி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிப் பெறும் மாணவர்கள், பட்டதாரியானப் பின்னரும், போதைப் பொருள் தடுப்பு ஆர்வலர்களாக நீடிப்பார்கள் என்றும் PEMADAM நம்பிக்கை தெரிவித்துள்ளது.

#TML