உலகக் கிண்ண தொடக்க ஆட்டங்களில் கிடைத்த அதிர்ச்சி முடிவில் இருந்து Argentina, Brazil, ஜெர்மனி ஆகிய அணிகள் நிச்சயம் மீண்டும் வரும்!

Jun 18, 2018, 04:11 AM

குழுவில் 2ஆம் ஆட்டத்தில் அம்மூன்று அணிகளிடம் இருந்தும் அபார ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என கூறுகின்றார் உள்நாட்டு கால்பந்து ஜாம்பவான் K தேவன்.

அம்மூன்று அணிகளைச் சந்தித்த Iceland, Switzerland, Mexico ஆகியவற்றின் தற்காப்பு அரணைப் பாரட்டியே ஆக வேண்டும் என்றும் தேவன் குறிப்பிட்டார்.

ஏற்கனவே சனிக்கிழமை Argentina, Icelandடுடன் 1-1 என சமநிலை கண்ட நிலையில், E குழுவில் களமிறங்கிய 5 முறை உலக வெற்றியாளரான Brazilலும், அதே 1-1 என்ற கோல் கணக்கில் Switzerlandடுடன் சமநிலை கண்டது. 

நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி F குழு தொடக்க ஆட்டத்தில் 0-1 என Mexicoவிடம் அதிர்ச்சி தோல்விக் கண்டது.

இவ்வேளையில், Mexicoவின் அவ்வெற்றியை கொண்டாட ரசிகர்கள் குதித்து ஆரவாரம் செய்ததில், Mexico நகரில் சிறிய அளவிலான நில அதிர்வே ஏற்பட்டு விட்டதாக அந்நாடு தகவல் வெளியிட்டுள்ளது.  

#TML