தமது மகளின் திருமணத்திற்கு காவல் துறையின் நிதி பயன்படுத்தப்படவில்லை- IGP

Jul 14, 04:30 AM

ஆசியாவின் உயர்நிலை காவல் அதிகாரிகளை அத்திருமணத்திற்கு அழைத்து வர காவல் துறையின் பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறி Sarawak Report மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டிருப்பது தொடர்பில் அவர் அவ்விளக்கத்தை அளித்தார்.

அத்தகைய உண்மை அல்லாத, அடிப்படையற்ற செய்தியை வெளியிட்டதற்காக அத்தரப்பு மீது சட்ட நடவடிக்கை எடுக்க தாம் பரிசீலித்து வருவதாக IGP கூறியுள்ளார்.

அந்த செய்தி தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை தாம் வரேவேற்பதாகவும் அவர் சொன்னார்.

#TML