கூடுதல் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது!

Aug 13, 2018, 12:08 AM

இவ்வாரத்தில் கூடுதல் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

முந்தைய அரசாங்கத்தின் கடனுதவி மற்றும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்ததால், நடப்பு Pakatan Harapan அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இதனிடையே, சிங்கப்பூர் அரசு பறிமுதல் செய்ததாக நம்பப்படும் தொழில் அதிபர் Jho Lowவுக்குச் சொந்தமான தனிப்பட்ட jet விமானத்தை நாடு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக Tun Dr. Mahathir Mohamad கூறினார்.

1MDB ஊழல் பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் சொத்துடைமைகளில் அவ்விமானம் அடங்கும் எனத் தகவல் கூறுகிறது. #TML