Mourinho-Pogba இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது!

Man United நிர்வாகி Jose Mourinhoவுக்கும், Paul Pogbaவுக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது!
கடந்த வாரம் Wolvesசுக்கு எதிரான EPL ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிய Pogbaதான் காரணம் என நேரடியாக சாடியிருக்கும் Mourinho, திடலில் தவறுகள் செய்வதை Pogba நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதற்கு பதிலடியாக, அளவுக்கதிகமாக தற்காப்பு யுக்தியை கையாளும் Mourinhoவிடம்தான் குறையிருக்கிறது எனக் கூறி Pogba வெளிப்படையாகவே பேசியிருக்கின்றாராம்.
ஒட்டு மொத்தத்தில், Old Traffordடில் Mourinhoவின் கீழ் விளையாடுவதில் Pogbaவுக்கு துளியும் மகிழ்ச்சி இல்லை என்றும், அதனால் அணியில் இருந்து வெளியேற அந்த France வீரர் வாய்ப்பு தேடுவதாகவும் தொடர்ந்து தகவல் பரவுகின்றது. #TML