தேர் இழுக்க காளைகளைப் பயன்படுத்த தடை!

Jan 18, 01:49 AM

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பினாங்கில் தேர் இழுக்க காளைகளைப் பயன்படுத்த இந்து அறப்பணி வாரியம் தடை விதித்துள்ளது.

அவ்வாரியத்தின் தலைவரும், பினாங்கு மாநில 2ஆவது துணை முதலமைச்சருமான பேராசிரியர் Dr P Ramasamy அதனை அறிவித்தார்.

விலங்குகளுக்கு எதிரான வன்முறைகளை களையும் நோக்கில் அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது; எனினும், தேருடன் காளைகளை உடன் அழைத்துச் செல்ல அனுமதியுண்டு என அவர் சொன்னார்.

#TML