சொதப்பிய Spurs : மூன்றாவது இடத்திற்கும் ஆபத்து!

Mar 10, 2019, 03:03 AM

லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய் விட்ட Tottenham-முக்கு, தற்போது மூன்றாவது இடமும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Southampton உடனான ஆட்டத்தில் 76-ஆவது நிமிடம் வரை 1-க்கு சுழியமென முன்னணியில் இருந்த Spurs, கடைசியில் 1-2 என தோல்வியுற்றது.

இதனால் 61 புள்ளிகளுடன் இருக்கும் Tottenham மூன்றாமிடத்தை, தன்னை துரத்தி வரும் Manchester United, Arsenal, Chelsea ஆகிய அணிகளிடம் பறிகொடுக்க வேண்டிய அபாயத்தில் உள்ளது.

குறிப்பாக 2 ஆட்டங்கள் குறைவாக ஆடியுள்ள Chelsea, இரண்டிலும் வெற்றிப் பெற்றால் 62 புள்ளிகளுடன் அது மூன்றாமிடத்திற்கு முன்னேறி விடும்.