14-ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதல் கூட்டத் தொடர்!

Mar 11, 04:09 AM

நாட்டின் அமைதியையும் மக்களின் ஒற்றுமையையும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

குறிப்பாக சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரியக் கருத்துகளை பகிருவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

14-ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதல் கூட்டத் தொடரை சற்று முன்னர் தொடக்கி வைத்து உரையாற்றிய போது பேரரசர் அவ்வாறு சொன்னார்.

நாட்டின் 16-வது மாமன்னர் என்ற முறையில் நாடாளுமன்றக் கூட்டத்தை Tuanku Al-Sultan Abdullah தொடக்கி வைப்பது இதுவே முதன் முறை.

மக்களவைக் கூட்டம் நாளை தொடங்கி 20 நாட்களுக்கு நடைபெறும். 

#TML