இரு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன!

Mar 11, 07:17 AM

ஜொகூர், Pasir Gudangங்கில் KimKim ஆற்றில் வீசப்பட்ட ரசாயனக் கழிவு தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்ட இரு பள்ளிகள் இன்று மீண்டும் மூடப்பட்டன.

அப்பள்ளியைச் சேர்ந்த 20க்கும் அதிகமான மாணவர்கள் ரசாயனக் கழிவில் இருந்து வெளியேறிய வாயுவைச் சுவாசித்து மூச்சுத் திணறலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிகிச்சை பெற மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ரசாயன வாயுவைச் சுவாசித்து பலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TML