50 மாணவர்கள் பாதிப்பு!

Mar 11, 10:42 AM

ஜொகூர், Pasing Gudangங்கில் ரசாயனக் கழிவு தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்ட இரு பள்ளிகள் இன்று மீண்டும் மூடப்பட்டன.

கடந்த வாரம் மூடப்பட்ட அப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

ஆயினும் ரசாயனக் கழிவில் இருந்து இருந்து வெளியேறிய வாயுவைச் சுவாசித்து சில மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஆகிய உபாதைகளுக்கு ஆளாகினர்.

அதனை அடுத்து அம்மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்பள்ளிக்கு அருகேயுள்ள பகுதிகள் குறிப்பாக ரசாயனக் கழிவு வீசப்பட்டதாகக் கூறப்படும் ஆற்றுப் பகுதியில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது. #TML