52 வயது ஆடவர் கைது!

Mar 12, 08:28 AM

தலைநகரில் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் தனது முகநூலில் கருத்து பதிவேற்றிய 52 வயது ஆடவர் கைதாகியிருக்கின்றார்.

அவ்வாடவர் நேற்று கைது செய்யப்பட்டதாக தேசிய காவல் படை தலைவர் Mohamad Fuzi Harun தெரிவித்தார்.

சமயத்தை அவமதித்தது, வேற்றுமையை உருவாக்கியது, ஒற்றுமையைச் சீர் குலைத்தது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட்டு வருவதாக IGP சொன்னார்.

சமூகவலைத்தளங்களில் இனவாத்ததைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பதிவேற்றுவோர் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். #TML