பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 260 தை எட்டியுள்ளது!

Mar 12, 10:35 AM

ஜொகூர், Kim Kim ஆற்றில் கசிந்த ரசாயன வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 260ஐ எட்டியுள்ளது.

அவர்கள் Tanjung Puteri Resort தேசியப் பள்ளி, இடைநிலைப் பள்ளி மற்றும் பொதுமக்களில் சிலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் Pasir Gudangங்கில் உள்ள Taman Pasir Putih சமூக மண்டபத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பந்தப்பட்ட அந்த இரு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் கைதான 3 சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது. #TML