34 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது!

Mar 13, 10:31 AM

ஜொகூர் Pasir Gudangங்கில் ரசாயனக் கழிவு வீசப்பட்ட இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள 34 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு அந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

இவ்வேளையில், Kim Kim ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்குற்றம் கடுமையானது என்பதால், சம்பந்தப்பட்ட நபர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்.

Kim Kim ஆற்றில் அபாயகரமான எட்டு வகையான ரசாயனக் கலவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. #TML