அவசர நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!

Mar 14, 01:06 AM

ஜொகூரில் ரசாயனக் கழிவு வீசப்பட்ட பகுதியில் அவசர நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

Pasir Gudangங்கில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாக மாநில menteri besar கூறியிருக்கிறார்.

Kim Kim ஆற்றில் வீசப்பட்டுள்ள ரசாயக் கழிவு இன்னும் ஒரு வாரத்தில் அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் அப்பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், வானிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Yeo Bee Yin சொன்னார்.

அச்சம்பவம் தொடர்பில் இன்று ஒரு சந்தேக நபர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TML