Pasir Gudangங்கில் அவசர நிலை அவசியமில்லை!

Mar 14, 11:38 PM

ஜொகூர், Pasir Gudangங்கில் ரசாயக் கழிவு தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 780தை எட்டியுள்ளது.

சுமார் 220 பேர் பல்வேறு உபாதைகளுக்குச் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில் ரசாயனக் கழிவு வீசப்பட்டு தூய்மைக்கேடு அடைந்துள்ள பகுதியில் தற்போதைக்கு அவசர நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் கூறியிருக்கிறார்.

அங்கு நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாக Tun Dr. Mahathir Mohomad சொன்னார். #TML