சம்பந்தப்பட்டுள்ள தரப்பை அரசாங்கம் அடையாளம் கண்டு வருகிறது!

Mar 15, 01:00 AM

ஜொகூர், Pasir Gudangங்கில் ரசாயனக் கழிவு வீசப்பட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பை அரசாங்கம் அடையாளம் கண்டு வருகிறது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று கண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் Tun Dr. Mahathir Mohamad அதனைத் தெரிவித்தார்.

தூய்மைக்கேடு ஏற்பட்ட பகுதியில் பல்வேறு அரசாங்க தரப்புகள் உரிய துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாக அவர் சொன்னார்.

எனவே அங்கு அவசர நிலையை அறிவிக்க வேண்டியத் தேவையில்லை; அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய அவசியமும் இல்லை என்றாரவர். #TML