மலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!

Mar 16, 04:25 AM

நியூசிலாந்து Christchurhசை உலுக்கிய சரமாரி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!

கல்வி அமைச்சர் Dr Maszlee Malik அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

அந்த துப்பாக்கிச் சூடு நிகழும் போது பெரும்பாலான மாணவர்கள் தத்தம் பல்கலைக்கழங்களில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Christchurchசில் இரு பல்கலைக்கழங்களில் 300க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் மேற்கல்வி பயின்று வருகின்றனர்.

இதனிடையே, அச்சம்பவத்தில் காயமடைந்த இரு மலேசியர்களில் ஒருவருக்கு 2ஆவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்டவரின் குடும்பம் நியூசிலாந்துக்கு பயணமாகவுள்ளனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 பேர் பலியான வேளை, 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அதன் தொடர்பில் கைதான மூன்று பேரில் ஒரு நபர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

#TML