கோவில்களையும் தேவாலயங்களையும் கண்காணிக்க காவல் துறைக்கு உத்தரவு!

Mar 19, 10:36 AM

நாடு முழுவதும் உள்ள கோவில்களையும் தேவாலயங்களையும் கண்காணிக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வாறு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.

யாரேனும் பதில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனரா என்பதைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக திச்ய காவல் படைத் தலைவர் கூறினார்.

இவ்வேளையில் நியூசிலாந்து சம்பவத்தில் காயமுற்ற மூன்று மலேசியர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் காணாமல் போன மலேசிய இளைஞர் ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. #TML