மாநில கல்வித்துறையே முடிவு செய்யும்!

Mar 20, 10:25 AM

ஜொகூர், Pasing Gudangங்கில் Kim Kim ஆற்றில் வீசப்பட்ட ரசாயனக் கழிவால் ஏற்பட்ட தூய்மைக்கேட்டை அடுத்து மூடப்பட்ட 111 பள்ளிகள் மாற்று வகுப்புகளை நடத்த வேண்டுமா என்பதை மாநில கல்வித்துறையே முடிவு செய்யும்.

அமைச்சு தற்போதைக்கு மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில்தான் கவனம் செலுத்த விரும்புவதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த 111 பள்ளிகளும் மார்ச் 30 ஆம் தேதி பள்ளித் தவணை விடுமுறை முடிவடையும் வரை மூடப்பட்டிருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. #TML