புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் யோசித்து வருகிறது!

Mar 21, 11:00 AM

சுற்றுச் சூழல் தூய்மைக்கேட்டை விளைவிப்போர் அதன் துப்புரவு பணிகளுக்கும் அவர்கள் ஏற்படுத்திய இதர பாதிப்புக்களுக்கும் தேவைப்படும் தொகையைச் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் யோசித்து வருகிறது.

1974 சூற்றுச் சூழல் தரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தத்தில் அதுவும் இடம் பெறும் என அறிவியல், தொழொல்நுட்பம், வானிலை மாற்றம், மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு கூறியது.

தூய்மைக்கேட்டுக்குக் காரணமானவர்கள் மீது மட்டும் கவனம் செலுத்துவதை விட கழிவுகளை அகற்றும் பணிகளைக் கண்காணிக்கத் தவறும் நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்கும் சாத்தியமும் புதிய சட்டத்தில் ஆராயப்படும் என அது தெரிவித்தது. #TML