PACயில் இருந்து விலகினார் Nurul Izzah Anwar!

Mar 23, 02:29 AM

Permatang Pauh MP Nurul Izzah Anwar, PAC எனும் நாடாளுமன்ற பொதுக் கணக்கு தணிக்கை செயற்குழுவில் இருந்து விலகியிருக்கின்றார்.

PACக்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தலைவராக முடியும் என்பதை வலியுறுத்தி அவர் முன்னதாக Facebookகில் கருத்தும் பதிவேற்றியிருந்தார்.

UMNO-வில் இருந்து ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள போதும் PAC தலைவராக Datuk Seri Ronald Kiandee நீடிப்பாரென பிரதமர் அண்மையில் அறிவித்ததே Nurul Izzah-வின் முடிவுக்கு காரணம் என நம்பப்படுகிறது.

Kiandee கடந்த வாரம் BERSATU கட்சியில் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

#TML