அமைதி பேரணியில் பொது மக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்!

Mar 23, 02:40 AM

இன்று காலை KL Merdeka சதுக்கத்தில் தொடங்கிய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் பொது மக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்!

நியூசிலாந்து Christchurch துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அப்பேரணி நடத்தப்படுகிறது.

பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பி.வேதமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும் அந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்..

Chrishchurch-சில் கடந்த வாரம் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் 17 வயது மலேசியர் Muhammad Haziq உள்ளிட்ட 50 பேர் பலியாயினனர்.

#TML