போலி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் பணி நீக்கப்படுவர்!

Mar 25, 02:28 AM

பட்டப்படிப்புக்கான போலி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக பணி நீக்கப்படுவர்!

அது மிக பெரிய கட்டொழுங்கு குற்றம் என வருணித்த மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை பாயும் என எச்சரித்தது.

எனினும், சான்றிதழ்களில் அசல் எது, போலி எது என்பதை முதலாளிமார்கள் கண்டுப்பிடிப்பது சிரமம் என்பதால், அதனை எளிமையாக்கும் நடைமுறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என அச்சம்மேளனம் வலியுறுத்தியிருக்கின்றது.

சில அரசியல் தலைவர்கள் மற்றம் உயர் மட்ட அதிகாரிகளை உட்படுத்திய போலிப் பட்டங்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சையை MEF மேற்கோள் காட்டியது.

ஆகக் கடைசியாக, அந்த சர்ச்சையில் ஜொகூர் மாநில சுற்றுச்சூழல் துறை இயக்குநர் சிக்கியுள்ளார்.

எனினும், தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தாம் வைத்துள்ள முனைவர் பட்டம் அசலானது என்றும், அதற்கான ஆதாரத்தையும் ஊடகங்களிடம் காட்டியுள்ளார்.

தம்மீது அத்தகைய பொய்யானத் தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

#TML