தகவல் உண்மையில்லை!

Mar 26, 07:22 AM

ஜொகூர், Pasir Gudangகில் ரசாய கழிவு தூய்மைக்கேட்டால் மூடப்பட்ட பள்ளிகளில் மாற்று வகுப்பு வைக்க வேண்டும் என கல்வி அமைச்சு கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் உண்மையில்லை.

அமைச்சர் Dr Maszlee Malik அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அது குறித்து முடிவை மாநில கல்வி துறை தான் எடுக்கும் என்று தான் தாம் கூறியிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே தவறான தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர் சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கேட்டுக் கொண்டார்.

Pasir Gudangகில் மூடப்பட்டுள்ள அனைத்து 111 பள்ளிகளும், இவ்வாரம் முதல் தவணை பள்ளி விடுமுறை முடிவடையும் வரை மூடப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. #TML