புதிய பட்டதாரிகளுக்கான சம்பளம் குறைந்துக் கொண்டே போகிறது!

Mar 28, 02:37 AM

நாட்டில் புதிய பட்டதாரிகளுக்கான சம்பளம் குறைந்துக் கொண்டே போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கின்றது!

ஆனால் அதுதான் உண்மை நிலவரம் என்கிறது Bank Negaraவின் 2018 ஆண்டறிக்கை.

2010ஆம் ஆண்டு, டிப்ளோமா கல்வி முடித்தவர்கள் சராசரியாக ஆயிரத்து 458 ரிங்கிட் தொடக்கச் சம்பளம் பெற்ற நிலையில், கடந்தாண்டு அது ஆயிரத்து 376 ரிங்கிட்டுக்கு குறைந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில், இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கான சம்பளம் ஈராயிரத்து 923 ரிங்கிட்டில் இருந்து ஈராயிரத்து 707 ரிங்கிட்டுக்கு சரிந்துள்ளது.

இந்த சம்பள சரிவானது, வேலைச் சந்தைக்குள் நுழையும் பட்டதாரிகளுக்கு நாட்டின் பொருளாதார சூழ்நிலை போதிய உயர் திறன் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவில்லை என்பதையே காட்டுவதாக Bank Negara கூறுகின்றது.

#TML