நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

Mar 28, 07:18 AM

மலாயா பல்கலைக்கழகம் அருகே நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் UMNO உச்சமன்ற உறுப்பினர் Datuk Lokman Noor Adam உள்ளிட்ட நால்வர் மீது நீதிம்னறத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கிக் காயம் விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கும், Najibப்பின் அந்த ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கைகலப்பு மீதான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. #TML