விசாரிக்கப்பட வேண்டும்!

Mar 31, 03:09 AM

உணவுப் பற்றுச் சீட்டு இலவசமாக வழங்கப்பட்ட நிகழ்வில் Rantau சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் Dr S Streram சென்றிருந்தது குறித்து விசாரிக்கப்பட்ட வேண்டும்.

அந்த Pakatan Harapan வேட்பாளர் தேர்தல் குற்றம் செய்திருக்கின்றரா என்பதை அறிய விசாரணை அவசியமாவதாக நெகிரி செம்பிலான் MCA கிளைத் தலைவர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனிடையே, அந்த இலவச உணவுப் பற்றுச் சீட்டுகள் வாக்காளர் அல்லாத மாணவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டதாக Dr. Streram தெரிவித்திருக்கிறார்.

Rantau இடைத்தேர்தலில் Dr. Streram, அம்னோ துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hassan ஆகியோரைத் தவிர்த்து மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அவ்விடைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.  #TML