111 பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன!

Mar 31, 04:08 AM

ஜொகூர், Pasir Gudangங்கில் Kim Kim ஆற்றில் வீசப்பட்ட ரசாயக் கழிவால் ஏற்பட்ட தூய்மைகேட்டைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த அனைத்து 111 பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மானவர்களும் ஆசிரியர்களும் சுவாசக் கவசத்தை அணிந்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் வருகை 90 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்ததாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.

Kim Kim ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டைத் தொடர்ந்து அப்பள்ளிகள் கடந்த 13 ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்தன. #TML