SPRரின் சிறப்புக் கூட்டம்!

Apr 01, 10:27 AM

சபா, Sandakanனில் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் வரும் வெள்ளிக்கிழமை Putrajayaவில் சிறப்பு கூட்டம் நடத்தவிருக்கிறது.

அக்கூட்டத்தில் Sandakan நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துவதற்கான தேதி உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படும் என SPR செயலாளர் தெரிவித்தார்.

அத்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Datuk Stephen Wong Tien Fatt, கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரது நல்லுடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #TML