வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படாது!

Apr 01, 11:39 PM

Datuk Seri Najib Tun Razak மீதான SRC International நிதி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படாது!

நீதிமன்ற விசாரணைகளை எந்த ஊடகத்திலும் நேரடியாக ஒளிபரப்ப முடியாது என, கூட்டரசு நீதிமன்ற அலுவலகத்தின் தலைமை பதிவாளர் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அந்த முன்னாள் பிரதமரை உட்படுத்திய வழக்கு விசாரணையைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என இதற்கு முன் சிலர் கோரிக்கை முன் வைத்திருந்தனர். 

அவ்வாறு செய்வது குறித்து முடிவெடுப்பதை நீதிமன்றத்திடமே விட்டு விடுவதாக துணைப்பிரதமர் Datuk Seri Dr Wan Azizah Wan Ismailலும் கூறியிருந்தார். #TML