பல மாணவர்கள் இன்னும் பள்ளிக்குத் திரும்பவில்லை!

Apr 02, 01:07 AM

ஜொகூர், Pasir Gudangங்கில் Kim Kim ஆற்றில் வீசப்பட்ட ரசாயனக் கழிவால் ஏற்பட்டு தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் இன்னும் பள்ளிக்குத் திரும்பவில்லை.

Kim Kim ஆற்றுக்கு அருகேயுள்ள அனைத்து 25 பள்ளிகளிலும் மாணவர் வருகை 95 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 5 விழுக்காட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவில்லை எனக் கூறியுள்ள மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், அவர்கள் அச்சம்பவத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

தூய்மைக்கேட்டை அடுத்து கடந்த மாதம் 13 ஆம் தேதி Pasir Gudangங்கில் மூடப்பட்ட அனைத்து 111 பள்ளிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. #TML