அரசாங்கத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக SUHAKAM கூறியிருக்கிறது!

Apr 04, 10:31 AM

பாதிரியார் Raymond Kohவும் சமூக ஆர்வலர் Amri Che Matட்டும் காணாமல் போனது தொடர்பில் தாங்கள் திரட்டிய தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக SUHAKAM கூறியிருக்கிறது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட அவ்விருவரையும் Bukit Aman Special Branchதான் கொண்டுச் சென்றதாகத் தாங்கள் கூறியிருந்தது தொடர்பில் அது அவ்வாறு செய்யவிருக்கிறது.

அதன் தொடர்பில் தமது தரப்பு நாளை அமைச்சர் ஒருவரைச் சந்திக்கவிருப்பாதாகவும் SUHAKAM தெரிவித்தது.

அவ்விருவரும் காணாமல் போனது தொடர்பில் விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படலாம் என முன்னதாக உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

ஆயினும் அவ்விவகாரம் மீண்டும் திறக்கப்படுவதைப் பொருத்து அது அமையும் என Tan Sri Muhyiddin Yassin குறிப்பிட்டிருந்தார்.

SUHAKAM தகுந்த ஆதாரத்தை காட்ட வேண்டும் என பிரதமரும் கேட்டுக் கொண்டிருந்தார். #TML