Najibப்புக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் மே 14ஆம் தேதி தொடங்குகிறது!

Apr 05, 10:33 AM

1MDB தொடர்பிலான Datuk Seri Najib Tun Razakகிற்கு எதிரான வழக்கு விசாரணை வரும் மே 14ஆம் தேதி தொடங்குகிறது.

அந்த முன்னாள் பிரதமர் மீதான வழக்கு விசாரணைக்கு KL உயர் நீதிமன்றம் 14 நாட்கள் நிர்ணயித்துள்ளது.

228 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய கையூட்டு, மற்றும் பணச்சலவை தொடர்பில் அவர் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

SRC Internationalலை உட்படுத்திய Najibக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த புதன்கிழமை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. #TML