Pakatan Harapan அரசாங்கத்தின் முதல் முயற்சி கைகூடவில்லை!

Apr 10, 02:02 AM

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் Pakatan Harapan அரசாங்கத்தின் முதல் முயற்சி கைகூடவில்லை!

1963 மலேசிய உடன்பாட்டில் கீழ் உள்ளவாறு, Sabah மற்றும் Sarawakகின் அடிப்படை அந்தஸ்த்தை மீட்டெடுக்க முன்வைக்கப்பட்ட அச்சட்ட திருத்த மசோதாவிற்கு, மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.

நேற்று சுமார் ஆறு மணி நேரம் விவாதிக்கப்பட்ட அச்சட்ட மசோதாவை, 138 MPக்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; எனினும், Sabah மற்றும் Sarawakகைச் சேர்ந்த எதிர்கட்சி MPக்கள் உட்பட 58 பேர் வாக்களிக்காததால் சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போனது.

#TML