Datin Seri Rosmah Mansor இன்று காலை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்!

Apr 10, 04:49 AM

சரவாக்கிலுள்ள உட்புறப் பகுதி பள்ளிகளுக்கு 125 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சூரிய சக்தி திட்டத்தை பெற்றுத் தர 50 லட்சம் ரிங்கிட் கையூட்டு வாங்கியதாக, KL Sessions நீதிமன்றத்தில் தம்மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

இதையடுத்து Rosmah -வை 10 லட்சம் ரிங்கிட் தொகையில் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Rosmah மீதான அவ்வழக்கு மே மாதம் 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

#TML