Datuk Seri Najib Razak புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்!

Apr 11, 02:20 AM

நாடாளுமன்ற விதிகளை மீறியதாக முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்!

FELDA வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அதன் உள்ளடக்கத்தை அவர் Facebook-கில் கசிய விட்டுள்ளார்.

அவ்வறிக்கையை நேற்று மதியம் வாக்கில் தான் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் Datuk Seri Azmin Ali மக்களவையில் தாக்கல் செய்தார்.

ஆனால், நஜீப்போ செவ்வாய்க் கிழமையே அவ்வறிகையின் ஒரு சிறு பகுதியை தனது Facebook பக்கத்தில் வெளியிட்டு விட்டார்.

FELDA-வில் நடந்த முறைகேடுகள் தொடர்பில் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைத் தற்காகும் முயற்சியாக அவர் அவ்வாறு செய்திருந்தார்.

நஜீப்பின் அச்செயல் குறித்து ஏமாற்றம் தெரிவித்த பிரதமர் Tun Dr Mahathir Mohamad, அவர் மீது சபாநாயகர் வழியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

#TML