வேலையிட சுகாதார, பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது!

Apr 12, 07:02 AM

ஜொகூர், Pengerangங்கில் உள்ள Petronas பெட்ரோலிய தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள அம்மாநில வேலையிட சுகாதார, பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடங்கும் முன் வெடிப்பு நிகழ்ந்த பகுதி பாதுகாப்பாக இருப்பதற்கான உத்தரவாதத்திற்காக அது காத்திருக்கிறது.

இவ்வேளையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அவ்வெடிப்பு தொடர்பில் தவறான த்கவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு அத்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அச்சம்பவத்தில் இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #TML