உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளும் நிலை!

Apr 14, 02:27 AM

மலேசியர்கள் உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளும் நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

நாளொன்றுக்கு அவர்கள் சுமார் 8 கிராம் உப்பை உட்கொள்வதாக அது தெரிவித்தது.

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்ததை விட்ட அது மிக அதிகம் என அமைச்சு மேலும் குறிப்பிட்டது. #TML