Peka B40 திட்டம் இன்று தொடங்குகிறது!

Apr 14, 11:40 PM

Peka B40 சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இன்று தொடங்குகிறது.

குறைந்த வருமானம் பெறும் B40 தரப்பினரை இலக்கு வைத்துள்ள அத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள் குறிப்பிட்ட தனியார் கிளினிக்குகளில் சுகாதார பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அதே சமயம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள், புற்றுநோய்க்கான சிகிச்சையை முழுமையாக்குவதற்கான உதவிநிதி, போக்குவரத்து உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும்.

வாழ்க்கைச் செலவின உதவித் தொகை கிடைக்கும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களும் அவர்களின் துணையும் அத்திட்டத்தின் வழி பலனடையலாம். #TML