மேலும் இருவர் தேடப்படுகின்றனர்!

Apr 15, 01:02 AM

Rantau சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, காவல் துறைனரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டது தொடர்பில் மேலும் இருவர் தேடப்படுகின்றனர்.

அச்சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் அவர்கள், அந்த ரோந்து வாகனத்தில் கூடுதல் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகச் சந்தேகித்து அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

இதனிடையே பொதுச் சேவைத்துறையினர் தங்களது கடமையை ஆற்ற இடையூறாக இருக்கக் கூடாது என காவல் துறை பொதுமக்களுக்கு நினைவுறுத்தியுள்ளது. #TML