துரத்தப்பட மாட்டார்கள்!

Apr 16, 10:30 AM

PPR வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் அங்கிருந்து துரத்தப்பட மாட்டார்கள்.

வாடகை பாக்கி அதிகம் இருந்தாலும் அவ்வாறு செய்யப்படாது என கூட்டரசு பிரதேச அமைச்சு கூறியிருக்கிறது.

மாறாக கட்டங் கட்டமாக வாடகை பாக்கியைச் செலுத்த அவர்களுக்குத் தளர்வு வழங்கப்படும்.

PPR வீடுகளில் குடியிருக்கத் தகுதி இழந்தவர்கள் மட்டுமே காலி செய்ய உத்தரவிடப்படுவர் என அமைச்சு மேலும் விளக்கியது. #TML