28 மாணவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்!

Apr 17, 10:34 AM

பேராவில் பள்ளியொன்றைச் சேர்ந்த 28 மாணவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அவர்கள் அப்பள்ளியின் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நான்கு மாணவர்களுக்கு H1N1 நோய்க்கிருமி பீடித்திருப்பது தெரிய வந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.

இரு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்; ஒரு மாணவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பள்ளியில் சுமார் நூறு மாணவர்கள் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக facebookக்கில் தவகவல் பரவியிருப்பதை அடுத்து மாநில அரசு அவ்வாறு தெளிவுபடுத்தியது. #TML