இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு தொடருமா?

Jan 20, 2015, 06:27 PM

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் இந்திய மாநிலமான கர்நாடாகவிலேயே தற்போது கூடுதலாக புலிகள் உள்ளன என்றும் அரசின் அந்த அறிக்கை கூறுகிறது. எனினும் புலிகள் பாதுகாப்பது தொடர்பில் சில குறைபாடுகள் உள்ளன என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வனப் பாதுகாவலர்கள் போதிய அளவில் இல்லாதது, புலிகளுக்கான உணவு தொடர்ச்சியாகக் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை சில முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இவை குறித்து நீலகிரி காணுயிர் சங்கத்தின் உறுப்பினரும், புலிகள் காப்பு செயல்பாட்டாளருமான விஜய் கிருஷ்ணராஜ் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்து கொண்டக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.